இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை

லூக்கா சுவிசேஷத்தின் அடிப்படையில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை திரைஒவியமாக மலர்கிறது.

வேத வெளிச்சம்

உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.

1.ஒரு புதிய ஆரம்பம்

மறுபடியும் பிறத்தல், மனந்திரும்புதல்

நம் ஒவ்வொருவருக்கும் ஒரு புதிய துவக்கம் அவசிய மாகும். தேவனால் மட்டுமே சரிப்படுத்தப்படக்கூடிய பல தவறுகள் நம்மிடமுள்ளன. தேவஜனங்களோடு தொடர்பில்லாமல் நாம் வாழுகிறோம். ஆதாம் ஏவாளோடு தொடர்புடைய துவக்கத்திற்கு நாம் போகப்போகிறோம். பிதாவாகிய தேவனுக்கு முன்பாக இயேசு கிறிஸ்து நமது பிரதிநிதியாயிருக்கிறார். நாம் மறுபடியும் பிறக்கும்போது நமக்கு ஆவிக்குரிய ஜீவியம் கிடைப்பதுடன், தேவனுடைய ஜனங்களோடும் இணைக்கப்படுகிறோம்.

புதிய வாழ்வைத் துவங்குவதற்குரிய அனுபவப் பூர்வமான காரியங்களாக சிந்தனை, விருப்பங்கள் மற்றும் தீர்மானங்களில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை மனந்திரும்புதலில் அடங்கியுள்ளன.
தொடர்ந்து படிக்க பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்: http://jesusshinesblog.blogspot.com/2010/06/gospel2.html


2.வெளியே காலடி எடுத்து வைத்தல்

தேவன்மேல் வைக்கும் விசுவாசம்

தேவன்மேல் வைக்கும் விசுவாசத்தில் அடங்கியிருப்பது எது? அது சரித்திர சம்பவங்களில் இயேசு கிறிஸ்து செய்தவைகளுக்குரிய உங்களுடைய மறுமொழியாகும்.

வேதாகமத்தின் உதவி: தேவனுடைய வார்த்தைகள் உங்கள் விசுவாசத்தை வளர்க்கின்றன.

தொடர்ந்து படிக்க பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்: http://jesusshinesblog.blogspot.com/2010/06/gospel3.html

3.உன்னதத்தின் பெலன்

பரிசுத்த ஆவியானவரின் கிரியைகள்

புதிய பிறப்பை அடைய நமக்கு உதவுவதுடன், உன்னதத்தின் பெலத்தினால் பரிசுத்த ஆவியானவர் நம்மை நிரப்புகிறார். இயேசு கிறிஸ்துவைக் குறித்துப் பேச நம்மைத் தைரியமுள்ளவர் களாக்குதல், ஆவிக்குரிய வரங்களால் நம்மை நிரப்புதல், ஜெபிக்க உதவிசெய்தல், நமது குணாதிசயங்களில் முன்னேற்றங்களை உருவாக் குதல், மற்ற விசுவாசிகளோடு நம்மை ஒன்றிணைத் தல் போன்ற காரியங்களைப் பரிசுத்த ஆவியானவர் நம்மில் நடப்பிக்கிறார்.

பரிசுத்த ஆவியானவரால் நிரம்பியிருங்கள்: அனுதினமும் அவரது ஆளுகைக்குள் அடங்கியிருங்கள்.

தொடர்ந்து படிக்க பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்: http://jesusshinesblog.blogspot.com/2010/06/blog-post_9160.html


4.மூழ்குதலை நிறைவேற்றுங்கள்

தண்ணீர் ஞானஸ்நானம்

கிறிஸ்தவ ஞானஸ்நானத்தைக் குறித்த கேள்விகள்: அது எங்கிருந்து வந்தது? புதிய ஏற்பாட்டின் அடிப்படையில் அது எப்படிச் செய்யப்பட வேண்டும்? யார் அதைப் பெறலாம்? அதன் பொருள் என்ன?

தொடர்ந்து படிக்க பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்: http://jesusshinesblog.blogspot.com/2010/06/gospel4.html

5.தேவனிடமிருந்து ஒரு தொடுதல்

கைகளை வைக்குதல்

கைகளை வைக்குதல் அதிசயங்களைச் செய்கிறது. குழந்தைகளை ஆசீர்வதிப்பது, வியாதியஸ்தரைக் குணமாக்குவது, சபை ஊழியர்களை நியமித்தல், பரிசுத்த ஆவியானவரின் வரங்கள் மற்றும் வல்லமையைப் பகிர்ந்தளித்தல் போன்றவைகளுக்கு அடையாளமாகக் கைகளை வைக்குதல் எப்படிச் செயல்படுகிறதென்று வேதம் விவரிக்கிறது.

தொடர்ந்து படிக்க பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்: http://jesusshinesblog.blogspot.com/2010/06/blog-post_1718.html

6.முன்னோக்கிப் பார்த்தல்

எல்லாம் எங்கே முடிவடையும்?

மரித்தோரின் உயிர்த்தெழுதலும், இறுதி நியாயத் தீர்ப்பும்: இயேசுவின் உயிர்த்தெழுதல், நாம் மரித்த பின்பு நமக்கு என்ன சம்பவிக்கும் என்பது போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டுள்ளது. ஆவிக்குரிய நம்பிக்கையையும், பெலனையும் பெற்றுக்கொள்வதற்குரிய போதனைகளை இப்பாடத்திட்டத்தில் நீங்கள் காணமுடியும்.

விஞ்ஞானத்தின் சில கூற்றுகள் மற்றும் சில புரிந்து கொள்ள முடியாத காரியங்களால் ஒரு கிறிஸ்தவன் குழப்பமடைய வேண்டியதில்லை. வேதாகமத்தில் கூறப் பட்டுள்ள கிறிஸ்துவின் இரண்டாவது வருகை, அவரது ஆயிரவருட அரசாட்சி, இறுதி நியாயத்தீர்ப்பு, அவிசுவாசிகளுக்குரிய நித்திய தண்டனை, விசுவாசிகளுக் குரிய நித்திய பலன், புதிய வானம் புதிய பூமியில் தேவனோடுள்ள நித்தியமான வாழ்க்கை போன்ற சத்தியங்கள் இவ்வுலகின் புரிந்துகொள்ள முடியாத குழப்பமான கொள்கைகளிலிருந்து வித்தியாசமானவை யாகவும், அற்புதமாவையாகவும் காணப்படுகின்றன.

தொடர்ந்து படிக்க பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்: http://jesusshinesblog.blogspot.com/2010/06/judgement.html

7.புதிய வாழ்க்கையின் தன்மைகள்

சீஷர்களை உருவாக்குதல்

கிறிஸ்துவிடமிருந்து நாம் பெற்றுக்கொள்ளும் புதிய வாழ்க்கையானது கிறிஸ்துவுக்காகப் புதிய முறையில் ஜீவிப்பதை உள்ளடக்கியதாகும். அப்போஸ்தலர்களால் போதிக்கப்பட்ட வாழ்க்கை முறையே புதிய விசுவாசிகளுக்குரிய முன்மாதிரியாகும்: பழையவைகளை ஒழித்துவிட்டு, புதியவைகளை ஏற்றுக்கொண்டு, அர்ப்பணிப்போடும், விழிப்போடும், ஜெபத்தோடும், அன்போடும் கிறிஸ்தவ விசுவாசத்தில் நிலைத்திருக்க வேண்டும்.

தொடர்ந்து படிக்க பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்: http://jesusshinesblog.blogspot.com/2010/06/disciple1.html

8.எல்லோரும் ஒன்றாயிருத்தல்

சபையில் மற்றவர்களோடு இணைந்து வாழுதல்.

நாம் தனித்தீவுகள்போல ஒதுங்கி நிற்பதல்ல, மற்றவர்களோடு இணைந்து வாழ்வைப் பகிர்ந்துகொள்வதே தேவனுடைய சித்தமாகும். சபையைக் குறித்த தேவனுடைய நோக்கத்தைப் புதிய ஏற்பாடு நமக்குச் சித்தரித்துக் காட்டுகிறது. ஒவ்வொரு உள்ளூர் சபையும் எப்படிப்பட்டவையாக இருக்க வேண்டுமென்பதற்குரிய மாதிரியை அப்போஸ்தலர் நடபடிகளில் நாம் காணலாம்.

தொடர்ந்து படிக்க பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்: http://jesusshinesblog.blogspot.com/2010/06/judgement.html


அடிப்படை வேதபாடங்களுக்கு:
http://www.biblestudentstamil.com/basic-bible-studies.htm
தேவசெய்திகளுக்கு:
http://www.cfcindia.com/tamil/weekly_pearls.php

கேட்க: u>
http://www.cfcindia.com/tamil/audio.php/a>;